உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முழு உற்பத்தி திறனை எட்டியது காக்ரபார் அணுமின் நிலையம்

முழு உற்பத்தி திறனை எட்டியது காக்ரபார் அணுமின் நிலையம்

புதுடில்லி: இந்தியாவின் இரண்டா வது 700 மெகா வாட் திறன் கொண்ட காக்ரபார் அணு மின் நிலையம், நேற்று முதல் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட துவங்கி இருப்பதாக இந்திய அணுசக்திக் கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: குஜராத்தின் காக்ரபார் அணு மின் நிலையத்தில், ஏற்கனவே 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் முழுதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு உலைகள் அமைக்கப்பட்டன.அதில் நான்காவது உலை, முழு உற்பத்தி திறனை எட்டுவதற்கு முன்னர், 90 சதவீதம் முழுத் திறனுடன் செயல்பட்டு வந்தது. கடந்த மார்ச் 31ம் தேதி, வணிகரீதியான மின் உற்பத்தி துவங்கிய நான்காவது உலையின் ஆற்றல், அணுசக்தி ஒழுங்கு ஆணையத்தின் அனுமதிக்கேற்ப உயர்த்தப்பட்டது. இதேபோன்று 700 மெகாவாட் வடிவமைப்பு கொண்ட மேலும் 14 அணுசக்தி உலைகளை இந்தியா உருவாக்கி வருகிறது. அவை 2031 - -32ம் ஆண்டுக்குள் படிப்படியாக செயல்படத் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை