உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எல்.ஐ.சி.,யின் பிரீமியம் வசூல் 12 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

எல்.ஐ.சி.,யின் பிரீமியம் வசூல் 12 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம் மொத்த பிரீமியம் தொகையாக, கடந்த ஏப்ரலில் 12,384 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.கடந்த 2023 ஏப்ரல் மாத வசூலான மொத்த பிரீமியம் தொகையான 5,810.10 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரலில் 113 சதவீதம் அதிகரித்து, 12,383.64 கோடி ரூபாய் என்ற வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.“எல்.ஐ.சி.,யின் புதுமையான சந்தைப்படுத்துதல் உத்திகள் மற்றும் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளுக்கான அதன் வலுவான நற்பெயர் ஆகியவையே, 12 ஆண்டுகளில் இல்லாத பிரீமியம் வசூலில் உச்சம் என்ற இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு காரணம்,” என்று நிறுவனம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்






ஐ.பி.ஓ.,

3 hour(s) ago  


முக்கிய வீடியோ