மேலும் செய்திகள்
எப் அண்டு ஓ., லாட் சைஸ் குறைப்பு
3 hour(s) ago
நிறுவன அறிவிப்புகள்
3 hour(s) ago
ஐ.பி.ஓ.,
3 hour(s) ago
இன்சூரன்ஸ் : விட்ட குறை தொட்ட குறை
3 hour(s) ago
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
5 hour(s) ago
புதுடில்லி:மசாலா பொருட்களில், 'எத்திலீன் ஆக்சைடு' ரசாயனம் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை, ஏற்றுமதியாளர்களுக்கு, இந்திய மசாலா வாரியம் வெளியிட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மசாலா பொருட்களில், கிருமி நீக்கம், பூச்சிக்கொல்லி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக, புற்றுநோயை உண்டாக்க கூடிய எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் பயன்படுத்துவதை ஏற்றுமதியாளர்கள் தவிர்க்க வேண்டும்.சரக்கு போக்குவரத்து, சேமிப்பகம் மற்றும் கிடங்குகள், பேக்கேஜிங் பொருள் வினியோகஸ்தர் கள், எந்த நிலையிலும் இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வினியோக தொடர் முழுதும், மசாலா மற்றும் மசாலா பொருட்களில் இவ்வகை ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய, ஏற்றுமதியாளர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.சமீபத்தில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள், இந்திய மசாலா நிறுவனங்களின் ஒரு சில மசாலாப் பொடிகளுக்கு தடை விதித்தன. இதையடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மசாலா பொருட்கள் வாரியம் இத்தகைய வழிகாட்டுதல்களை ஏற்றுமதியாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago