உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆர்.பி.ஐ.,யின் அபராத வசூல் 3 ஆண்டுகளில் ரூ.79 கோடி

ஆர்.பி.ஐ.,யின் அபராத வசூல் 3 ஆண்டுகளில் ரூ.79 கோடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் அபராதமாக வசூலித்த தொகை, 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக, நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'சைன்சீ' தெரிவித்துள்ளது.கடந்த 2021 முதல் நடப்பாண்டு ஜனவரி வரையிலான மூன்று ஆண்டு காலத்தில், ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களிடம் அபராதமாக வசூலித்த தொகை 88 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், அபராதமாக மொத்தம் 78.60 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. கே.ஒய்.சி., மற்றும் பண மோசடி தடுப்பு மீறல்கள் ஆகியவை, பெரும்பாலான அபராதத்திற்கு காரணமாக உள்ளன. ஒரு நிறுவனம் அதன் நடைமுறை செலவில், குறிப்பிட்ட தொகையை, பணமோசடி தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தவறுவதால், அவை அபராதத்திற்கு உள்ளாகின்றன.குறிப்பாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடம் போதுமான ஏற்பாடுகள் இல்லாததால், மொத்த அபராதத்தில் இவற்றின் பங்கு அதிகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நகர கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து 13.50 கோடி ரூபாயும், கிராம கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து 20.13 கோடி ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி