மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக குறைந்தது. தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரலில் 5 சதவீதமாக சரிந்ததுமியூச்சுவல் பண்டு சந்தையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 48,099 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்களின் பண்டு முதலீடுகள் 30,000 கோடியை கடந்து வருகின்றனதேர்தல் முடிவுகள் பற்றி கவலைப்படாமல், கடந்த மாதம் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் பிரிவில் முதலீடுகள் அதிகரித்து, 34,697 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஏப்ரலில் 18,917 கோடி ரூபாயாக இருந்ததுஉலக வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன் கணிப்பை 6.60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே, வளர்ச்சி 6.40 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரி மாதம் கணித்திருந்தது கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான எஸ்.ஐ.பி., கணக்குகள் முடிக்கப்பட்டன. துவங்கப்படும் ஒவ்வொரு எஸ்.ஐ.பி., கணக்கிற்கும் எவ்வளவு கணக்குகள் முடிக்கப்படுகின்றன என்பதே 'ஸ்டாப்பேஜ்' விகிதம். இந்த விகிதம், கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவாக 0.88 ஆக இருந்ததுநுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில், கடந்த மாதம் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் 19.72 சதவீதமாக சரிந்தன. கடந்த சில மாதங்களில் இதுவே இப்பிரிவில் அவர்களின் குறைந்த சதவீத முதலீடாகும்.வரும் வாரம் வங்கிகள் வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன சில்லரை விற்பனை நிலவரம், தொழிற்சாலைகள் உற்பத்தி நிலவரம், கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, எஸ்., அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு மற்றும் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.கவனிக்க வேண்டியவை கடந்த வாரம் திங்களன்று 30 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று வர்த்தக நாளின் இறுதியில் 5 புள்ளிகள் ஏற்றத்துடனும், புதனன்று 58 புள்ளிகள் ஏற்றத்துடனும், வியாழனன்று 75 புள்ளிகள் ஏற்றத்துடனும், வெள்ளியன்று 66 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது நாளை சந்தை விடுமுறை. நான்கு வர்த்தக தினங்களை கொண்ட வாரத்தில் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவற்றை சார்ந்தே நிப்டியின் நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, வர்த்தகர்கள் இவற்றின் மீது ஒரு கண் வைத்து, மிகுந்த எச்சரிக்கையுடன், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நஷ்டத்தை குறைக்க உதவும் குறுகிய அளவிலான ஸ்டாப்லாஸ்களை உபயோகித்து வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம் டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதை போன்ற நிலைமையே தென்படுகிறது. ஏற்றம் தொடர்ந்தாலும், செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல், அவ்வப்போது திடீரென்று இறக்கம் வந்து செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:நிப்டி 23,285, 23,104 மற்றும் 22,995 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 23,568, 23,671 மற்றும் 23,780 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 23,388 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025