உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்

வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்

சென்னை: துாத்துக்குடியில், 'வின்பாஸ்ட்' நிறுவனம், மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் நாளை மறுதினம் அடிக்கல் நாட்டுகிறார். தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழிற்சாலைகளில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக, திருவண்ணாமலை, பெரம்பலுார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 11 புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, துாத்துக்குடி மாவட்டத்தில், சிலாநத்தம் என்ற இடத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், ஒருங்கிணைந்த தொழிற்சாலை அமைக்கிறது. அதன்படி, ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார் தயாரிக்கும் திறனில் தொழிற்சாலை மற்றும் மின்சார வாகன பேட்டரி தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளன; சிப்காட்டின் சிலாநத்தம் தொழில் பூங்காவில், 408 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளது. வின்பாஸ்ட் நிறுவனம் முதல் கட்டமாக, 4,000 கோடி ரூபாயும்; அடுத்த 10 ஆண்டுகளில், 16,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை