உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பொதுத்துறை பங்குகள் 999% அதிகரிப்பு

பொதுத்துறை பங்குகள் 999% அதிகரிப்பு

மும்பை:பொதுத்துறை நிறுவன பங்குகளின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் 999 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தற்போது வரையிலான காலத்தில் 999 சதவீதம் அதிகரித்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக 'ஆர்.வி.என்.எல்., ஐ.ஆர்.எப்.சி., ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பெல்' ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, இதே காலகட்டத்தில், 500 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வை சந்தித்துள்ளன. 'எஸ்.ஜே.வி.என்., பி.எப்.சி., ஆர்.இ.சி.,' ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும்; 'ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட்' நிறுவனங்களின் பங்குகள் 140 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

G Mahalingam
ஜன 31, 2024 18:21

இப்போது பேங்க் கூட பல மடங்கு லாபத்தில் இயங்குகிறது.


Ramaraj P
ஜன 31, 2024 16:29

30 நாட்களில் எனக்கு 70 லாபத்தை கொடுத்தது.


Suppan
ஜன 31, 2024 15:20

இந்த நிறுவனங்களின் குறைந்த அளவு பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன. அவர்களும் பலனடைந்தார்கள். எல் ஐ சி யின் பங்கு விலை இப்பொழுதுதான் அரசு விற்ற விலையை நெருங்கிக்கொண்டிருக்கிறது.


ஆரூர் ரங்
ஜன 31, 2024 12:46

இவற்றை அம்பானி அடானி க்கு விற்றுவிட்டார் ன்னு காங் திமுக???? சொல்லிக் கொண்டிருந்தார்களே.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை