உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு

பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு

திருப்பூர்:கடந்த நிதியாண்டில், நம் நாட்டில் இருந்து, 1.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி நுாலிழை, துணி ரகங்கள் மற்றும் கைத்தறி ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நிதியாண்டில் நடந்த, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது. பருத்தி நுாலிழை, துணி, வீட்டு உபயோக ஜவுளி, கைத்தறி ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி, 1.02 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது; முந்தைய ஆண்டில், 96,729 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வகை பொருட்கள் ஏற்றுமதி 5.45 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.செயற்கை நுாலிழை, துணி, வீட்டு உபயோக ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி, 41,195 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; முந்தைய ஆண்டில், 38,735 கோடியாக இருந்தது.திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'வரும் ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்தும், செயற்கை நுாலிழை ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி