உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு; பேடிஎம் பங்குகள் 5% உயர்வு

ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு; பேடிஎம் பங்குகள் 5% உயர்வு

புதுடில்லி:ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு சேர்ந்ததை அடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை, தேசிய பங்குச்சந்தையில், 5 சதவீதம் உயர்ந்தது.பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. முன்பு, பிப்ரவரி 29ம் தேதி வரை இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, மேலும் 15 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.அதன்படி வரும் மார்ச் 15ம் தேதிக்கு முன்னதாக, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் தங்களது வங்கி கணக்குகளை பிற வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளுமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.மார்ச் 15ம் தேதிக்கு பின், பேடிஎம் வங்கியின் வாடிக்கையாளர்கள், அவர்களது வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும், இதன் பின்னரும் வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் அவர்களது வங்கி கணக்குகளில் உள்ள இருப்புத்தொகையை, தொடர்ந்து பயன்படுத்த முடியும்.பேடிஎம் பேமன்டெஸ் வங்கியின் தாய் நிறுவனமான 'ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்' சமீபத்தில் அதன் நோடல் வங்கி கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியது. இந்த கூட்டின் வாயிலாக வணிகர்களுக்கான செயல்பாடுகளை தொடர்ந்து வழங்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு விலை, நேற்றைய தேசிய பங்குச் சந்தையில், 5 சதவீதம் உயர்ந்து. 358 ரூபாயாக அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை