மேலும் செய்திகள்
சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி
21-Feb-2026
இரு மடங்கு உயர்ந்தது வர்த்தக பற்றாக்குறை
17-Feb-2026
முந்தைய முடிவு: 22,474.05நேற்றைய முடிவு: 22,493.55மாற்றம்: 19.50 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 74,085.99நேற்றைய முடிவு: 74,119.39மாற்றம்: 33.40 ஏற்றம் பச்சை
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் புதிய உச்சத்தை தொட்டன. உலோகம் மற்றும் நுகர்பொருள் துறைகளில் அதிக லாபம் ஈட்டப்பட்டதை அடுத்து, இக்குறியீடுகள் புதிய உச்சம் கண்டன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 74,245 புள்ளிகளையும், நிப்டி 22,526 புள்ளிகளையும் தொட்டது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தைச் சேர்ந்த, 'டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர்' போன்ற பல நிறுவனங்கள், நேற்றைய வர்த்தகத்தில் நல்ல லாபத்தை கண்டன கடந்த பிப்ரவரியில் வாகன விற்பனை, 13 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டதாகவும்; பயணியர் வாகன விற்பனை, 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்ததை அடுத்து, வாகன பங்குகள் விலை அதிகரித்தன நடப்பு நிதியாண்டில், எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்ற நம்பிக்கையால் உலோகம், மூலதன பொருட்கள் சார்ந்த பங்குகள் விலை உயர்ந்தன ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, சியோல் மட்டுமே ஏற்றத்தை கண்டது. மற்ற சந்தைகளான டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை இறக்கத்தை சந்தித்தன ஐரோப்பிய சந்தைகள் தள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்த நிலையில், புதன் கிழமையன்று அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலைக்கு திரும்பி இருந்தன அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், புதன் அன்று 2,767 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி குவித்தனர் உலக சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை, 1 பேரலுக்கு 0.65 சதவீதம் சரிந்து, 82.42 டாலராக இருந்தது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 82.73 ரூபாயாக இருந்தது.
மும்பை பங்கு சந்தை ஏற்றம் கண்டவை: 54%இறக்கம் கண்டவை: 43%மாற்றம் காணாதவை: 3%
* டாடா ஸ்டீல்* டாடா கன்ஸ்யூமர்* பஜாஜ் ஆட்டோ* டாடா மோட்டார்ஸ்* ஜெ.எஸ்.டபிள்யு., ஸ்டீல்
* மஹிந்திரா அண்டு மஹிந்திரா* பி.பி.சி.எல்.,* ரிலையன்ஸ்* ஆக்ஸிஸ் பேங்க்* ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்
21-Feb-2026
17-Feb-2026