மேலும் செய்திகள்
வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது
37 minutes ago | 2
பெங்களூரு: கர்நாடகாவின் பிரபல ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஸ்ரீராமுலு, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்ரீராமுலு. ரெட்டி சகோதரர்களை போல இவரும் சுரங்க தொழில் அதிபராக உள்ளார். முறைகேடாக சுரங்கத்தொழில் நடத்தியதாக, ரெட்டி சகோதரர்களுடன் இவருடைய பெயரையும் லோக்ஆயுக்தா குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் சதானந்த கவுடா அமைச்சரவையில் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே இவர், தன்னுடைய பெல்லாரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து ஸ்ரீராமுலு குறிப்பிடுகையில், ''முறைகேடாக சுரங்கத்தொழில் நடத்தியதாக, லோக்ஆயுக்தா என் மீது குற்றம்சாட்டியுள்ளது. இந்த அறிக்கையால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னுடைய ராஜினாமாவால் ஆளும் பா.ஜ., கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பா.ஜ.,வின் ஐந்து ஆண்டு கால ஆட்சியை சதானந்த கவுடா நிறைவு செய்வார்,'' என்றார்.
37 minutes ago | 2