மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
1 hour(s) ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
புதுடில்லி: உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று இரவு டில்லி திரும்புகிறார்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளிநாடு சென்ற சோனியா, 4ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அவர் என்ன நோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்ற விவரத்தை காங்கிரஸ் கட்சி தெரிவிக்கா விட்டாலும், கர்ப்பப்பை புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சோனியா வெளிநாடு சென்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது படேல், ஜனார்த்தன் திவேதி மற்றும் ராகுல் ஆகியோர் கவனிப்பர் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட சோனியாவுக்கு சில நாட்கள் உதவியாக இருந்த ராகுல், சமீபத்தில்தான் டில்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த சோனியா, இன்று இரவு நாடு திரும்புகிறார். அவருடன் மகள் பிரியங்காவும் வருகிறார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
1 hour(s) ago
2 hour(s) ago | 10