உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் எழுத்தாளருக்கு சாகித்ய அகடமி விருது

காஷ்மீர் எழுத்தாளருக்கு சாகித்ய அகடமி விருது

ஸ்ரீநகர் : காஷ்மீரை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், கவிஞருமான குலாம் நபி ஆதீஷ் எழுதிய நூலுக்கு, 'சாகித்ய அகடமி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.சாகித்ய அகடமியால் அங்கீகரிக்கப்பட்ட, 24 மொழிகளில், சிறந்த படைப்பிலக்கியங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, குழந்தை இலக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு விருதையும், சாகித்ய அகடமி வழங்கி வருகிறது.கடந்த ஆண்டுக்கான குழந்தை இலக்கிய விருதுக்கு, புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய,'சோளக்கொல்லை பொம்மை' என்ற நூல், இவ்விருதைப் பெற்றுத் தந்துள்ளது.இதே போல, காஷ்மீர் எழுத்தாளர் குலாம் நபி ஆதீஷ்க்கும், அவர் எழுதிய 'நவ் கேட்ஷா மென்ஷா' என்ற குழந்தை இலக்கிய நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த சித்தார்த்த சர்மா எழுதிய 'கிராஸ்ஹூப்பர்ஸ் ரன்' என்ற நாவலுக்காக சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருது தரப்படுகிறது.வரும் நவம்பர் 14ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில், இதற்கான விருது அளிக்கப்படும். இந்த விருது 51 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், பாராட்டு பத்திரமும் அடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை