உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் லீக்: கோல்கட்டா அணி தகுதி

சாம்பியன்ஸ் லீக்: கோல்கட்டா அணி தகுதி

ஐதராபாத்: மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐதராபாத்தில் நடந்தது. நேற்று இரவு நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சாமர்சட்(இங்கிலாந்து) அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சாமர்சட் அணி கேப்டன் அல்போன்சா தாமஸ் 'பேட்டிங்' தேர்வு செய்தார். சாமர்சட் அணிக்கு பீட்டர் டிரகோ, வான் டெர் மெர்வி கைகொடுத்தனர். அதிரடியாக ஆடிய இவர்கள், அதிவிரைவாக ரன் சேர்த்தனர். மெர்வி 40 ரன்களுக்கு வெளியேறினார். ஹில்டிரத்(13), காம்ப்டன்(20) நம்பிக்கை தந்தனர். அரைசதம் கடந்த டிரகோ(70) ரன் அவுட்டானார். சாமர்சட் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி குறைந்தபட்சம் 153 ரன்கள் எடுத்தால், பிரதான சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது. பிஸ்லா(8) கேப்டன் காலிஸ்(1) விரைவில் வெளியேற, துவக்கத்தில் திணறியது. கோஸ்வாமி(14), மனோஜ் திவாரி(27) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. யூசுப் பதான்(12), சாகிப் அல் ஹசன்(13) ஏமாற்ற, சிக்கல் ஏற்பட்டது. அடுத்து வந்த டசாட்டே(46) பொறுப்பாக விளையாடி, அணியின் பிரதான சுற்று கனவை நனவாக்கினர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆனாலும் 'ரன் ரேட்' அடிப்படையில் பிரதான சுற்றுக்கு முன்னேறியது. இம்முறை டிரினிடாட் அண்டு டுபாகோ, சாமர்சட், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ