உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் லீக்: பெங்களூரு சாதனை வெற்றி

சாம்பியன்ஸ் லீக்: பெங்களூரு சாதனை வெற்றி

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் தொடரின் 20வது போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், தெற்கு ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தெற்கு ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணியின் டானியல் ஹாரிஸ் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 61 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் தெற்கு ஆஸ்திரேலியா குவித்த 214 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. இதன் பின்னர் கடின இலக்குடன் களமிறங்கியுள்ள பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து சாதனை வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் பெங்களூரு அணி பெற்றது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி