உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குப்பதிவு சதவீத குளறுபடி: தேர்தல் ஆணையரிடம் புகார் கூற ‛‛இண்டியா கூட்டணி முடிவு

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி: தேர்தல் ஆணையரிடம் புகார் கூற ‛‛இண்டியா கூட்டணி முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு சதவீத்தில் குளறுபடி தொடர்பாக ‛‛இண்டியா கூட்டணி'' தலைவர்கள் நாளை தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. ஏழாம் கட்ட தேர்தல் ஜூன்01-ல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 04-ம் தேதி நடக்கிறது.இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீத்தினை வெளியிடுவதில் மாநில தேர்தல் ஆணையம் குளறுபடி செய்வதாக இக்கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதையடுத்து நாளை (மே.10) டில்லி தலைமை தேர்தல் ஆணையரை ‛இண்டியா கூட்டணி ''யை ச்சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடுவதில் ஏற்பட்டு வரும் குளறுபடி குறித்து விவரங்களை தெரிவிக்கின்றனர்.மேலும் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ மத விவகாரங்களை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.V. Iyer
மே 10, 2024 04:23

தமிழகத்தில்தான் நிறைய குளறுபடி சில இடங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும் அதிலும் கோவையில்


rama adhavan
மே 10, 2024 02:34

படித்தவர்கள், பண்பாளர்களுக்கு தெரியும் சரியான இறுதி புள்ளி வர நேரமாகும் என அதுவரை கிடைக்கும் தற்காலிக புள்ளியை தான் தர இயலும் என எனவே இந்த செய்தியை புறக்கணித்து நாம் தேர்தல் ஆணையத்தை ஆதரிப்போம்


kannan sundaresan
மே 09, 2024 22:17

மக்கள் கவனத்தை ஏதாவது ஒருவழியில் குழப்ப வேண்டும் என்று இந்திய கூட்டனி செயல்படுகிறது. இவர்கள் ஜெயிக்க மாட்டார்கள்


Kasimani Baskaran
மே 09, 2024 22:16

சூரிய டீவியை பார்த்தால் தீம்காதான் ஆட்சியமைக்கப்போவது போல உருட்டுகிறார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 10, 2024 12:29

மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய இந்தியாவின் பிரதமர் ஆனாலும் அச்சரியப்பட ஒன்றும் இல்லை ஏனெனில் திமுகவின் இந்திய கூட்டணி க்கு மேல் வெற்றி நிச்சயம் பாஜக கூட்டணி இடங்களில் வென்றாலே ஆச்சரியம் சூரியன் ஜுன் நான்காம் தேதிக்கு பிறகு தட்சணாயம் நோக்கி நகரும் இனிமேல் வளர்பிறை தேய்பிறை எதுவும் கிடையாது நிலவு எப்பொழுதும் முழு நிலவாகவே இருக்கும் நிலவில் MDS Bakery திறக்கப்படும் SETC பேருந்து நிலவுக்கு சென்று வரும் மகளிருக்கு இலவசம்


Duruvesan
மே 09, 2024 21:47

இப்போ evm மேல பழி போட வேண்டாம், வேற நெறய காரணம் தேடலாம், தோத்து பிறகு evm ஒயிங்கனு கூவலாம்


Jai
மே 09, 2024 21:42

ஆப்பிரிக்கார்கள் செய்தியை மறக்கடிக்க இந்த புகார் முயற்சியா?


Ramesh Sargam
மே 09, 2024 21:20

அந்த கூட்டணியில் உள்ள வொவொருவருக்கும் ஒரே எண்ணம், ஒரே நினைப்பு - அடுத்த பிரதமர் தான்தான் ஆகவேண்டும்


தாமரை மலர்கிறது
மே 09, 2024 21:14

அதிகப்படியான தகவல்களை தேர்தல் கமிஷன் தருவதை நிறுத்தவேண்டும் இந்த அக்கப்போர் பேர்வழிகள் ஏதாவது தவறு நடக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் ஜூன் நாலாம் தேதி தான் அணைத்து தகவல்களும் கிடைக்கும் என்று சொல்லி, கமுக்கமாக இருக்கவேண்டும் ஜூன் நாலாம் தேதி நாநூற்றிஐம்பது தொகுதிகளை மோடி கைப்பற்றிவிட்டார் என்று சொன்னால் போதும் ரெண்டுநாட்கள் ஒப்பாரி வைப்பார்கள் அப்புறம் ராகுல் தாய்லாந்து ஓடிவிடுவார் இந்த அக்கப்போர் பேர்வழிகளை தேர்தல் கமிஷன் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது எல்லாவற்றையும் சந்தேகண்ணோடுதான் பார்ப்பார்கள் சுப்ரிம் கோர்ட் தேர்தல்கமிஷன் பக்கம் இருக்கும்வரை, அக்கப்போர் பேர்வழிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி