உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -மனைவி மீது ஆத்திரத்தில் மகனை கொன்றவர் கைது

-மனைவி மீது ஆத்திரத்தில் மகனை கொன்றவர் கைது

சீதாபூர்:உத்தர பிரதேசத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்தவர் தன் மூன்று வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.உ.பி.,யின் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் பாப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். நேற்று முன் தினம் இரவும் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.இந்நிலையில், நேற்று அதிகாலை தன் மூன்று வயது மகன் நிகிலை வெளியில் அழைத்துச் சென்ற பாப்லு, மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் மகன் என்றும் கூட பார்க்காமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.மகனைக் காணாமல் தவித்த பப்லுவின் மனைவி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையின்போது, மகனுடன் பாப்லு அதிகாலையில் வயல்வெளியில் திரிந்ததாக கிராம மக்கள் கூறினர்.போலீசார் பாப்லுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வயலில் வீசியதை ஒப்புக் கொண்டார். வயலில் கிடந்த நிகில் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் பாப்லுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை