உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

கலபுரகி:ஜுவர்கி நகராட்சியின் 13 பா.ஜ., கவுன்சிலர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்தனர்.கலபுரகி மாவட்டம், ஜூவர்கி நகராட்சியில் 23 வார்டுகள் உள்ளன. இவற்றில், பா.ஜ.,வுக்கு 17; காங்கிரஸ் 3; ம.ஜ.த., 3 உறுப்பினர்கள் இருந்தனர். பா.ஜ., வசம் நகராட்சி இருந்தது.இந்நிலையில், பா.ஜ.,வின் 13 கவுன்சிலர்கள், நேற்று பெங்களூரில் மத்திய அமைச்சர் குமாரசாமி முன்னிலையில், ம.ஜ.த.,வில் இணைந்தனர். இவர்களை ம.ஜ.த.,வில் இணைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டப்ப கவுடா பாட்டீல்.இவர், கடந்தாண்டு சட்டசபை தேர்தலில், ஜுவர்கியில் போட்டியிட சீட் தர பா.ஜ., மறுத்தது. இதனால் கோபமடைந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி ம.ஜ.த.,வில் இணைந்தார். ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்விக்கு காரணமான பா.ஜ.,வை பழிவாங்கக் காத்திருந்து, தற்போது கவுன்சிலர்களை இழுத்து வந்துள்ளார்.அதே நேரம், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ள நிலையில், தங்கள் கட்சி கவுன்சிலர்களை, ம.ஜ.த.,வினர் இழுத்ததால் உள்ளூர் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாநில தலைவருக்கு, மாவட்ட தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.கூட்டணியில் இருந்து கொண்டே, தங்கள் கட்சி கவுன்சிலர்களை இழுத்தது, மாநில பா.ஜ., தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜுவர்கி நகராட்சியில், பா.ஜ., மெஜாரிட்டியை இழந்துள்ளதால், ம.ஜ.த., நகராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ