உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு

சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு

பெங்களூரு : சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரின் லக்கரேவில் வசிப்பவர் சேத்தன், 28. இவர் தன் வீட்டு அருகில் வசிக்கும் மூன்று வயது சிறுமியை, பலாத்காரம் செய்தார். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்படி, சேத்தனை 2022 ஜூலை 7ல் போலீசார் கைது செய்தனர்.விசாரணையை முடித்து போலீசார், பெங்களூரின் ஒன்றாவது விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் சேத்தனின் குற்றம் நிரூபணமானதால், இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ரூபா, நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ