மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில், பெங்களூரு தியாகராஜநகர் எஸ்.வி.சி.கே., பள்ளி மாணவி அலமேலு, ஷிவமொகா அரசு தமிழ் பள்ளி மாணவர் முகமது ரபீக் ஆகியோர் 125க்கு 122 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தி உள்ளனர்.கர்நாடகாவில் இந்தாண்டு நடந்த பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் நுாற்றுக்கு நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.இதற்கிடையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், முதல் மொழி பாடமாக தமிழ் மொழியில், 76 மாணவர்கள் தேர்வு எழுதினர். 56 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 73.68 சதவீதம் ஆகும்.கடந்தாண்டு தேர்வில், 58 மாணவர்கள் தேர்வு எழுதி 29 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 50 சதவீதம் ஆகும். ஆசிரியர்களின் முயற்சி, மாணவர்களின் உழைப்பின் காரணமாக, இந்தாண்டு தமிழில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.பெங்களூரு தியாகராஜநகரில் உள்ள எஸ்.வி.சி.கே., எனும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலை பள்ளி மாணவி அலமேலு; ஷிவமொகா பி.எச்.சாலையில் உள்ள அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளி மாணவர் முகமது ரபீக் ஆகிய இரண்டு பேர், 125க்கு 122 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தி உள்ளனர்.இதுபோன்று, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பைபர்கேடட் உயர்நிலைப் பள்ளி மாணவி கமலி, ஷிவமொகா அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ ஆகிய இரண்டு பேர், 121 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம்.பெங்களூரு கதிரேனஹள்ளி ஸ்ரீ சைலா எஜுகேஷன் சொசைட்டி உயர்நிலைப் பள்ளி மாணவி ஈஸ்வரி; இதே பள்ளி மாணவர் பரணி; ஷிவமொகா அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளி மாணவர் செல்வகுமார்; சாம்ராஜ்பேட் அரசு பள்ளி மாணவி ஐஸ்வர்யா ஆகிய நான்கு பேர், 119 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், எஸ்.வி.சி.கே., பள்ளி மாணவி பிரியா, 118 மதிப்பெண் எடுத்தும்; இதே பள்ளி மாணவி வைஷ்ணவி 117 மதிப்பெண் எடுத்து முறையே 4, 5ம் இடங்களை பிடித்துள்ளனர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் லட்சுமிபதி, உதவி முதல்வர் லீலா லட்சுமிபதி, ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி, பாராட்டினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago