| ADDED : மே 11, 2024 06:59 AM
ராம்நகர்: கிரஹப்பிரவேசத்தில், விருந்து சாப்பிட்ட 28 பேருக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ராம்நகரின், கன்னமங்களாதொட்டி கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ் என்பவர், புதிதாக வீடு கட்டியுள்ளார். நேற்று கிரஹப்பிரவேசம் நடத்தினார். இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.நேற்று மதியம் 1:30 மணியளவில், விருந்து பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட பலருக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 28 க்கும் மேற்பட்டோர், ராம்நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் எட்டு பேர் சிறார்கள்.தகவலறிந்து கிராமத்துக்கு வந்த, சுகாதாரத்துறை அதிகாரிகள், விருந்தில் பரிமாறப்பட்ட உணவு சாம்பிளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பினர்.