உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பீஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து": நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்

"பீஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து": நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்' என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜ., கூட்டணி தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கின்றனர். இன்று (ஜூன் 29) பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.மத்திய அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் தே.ஜ., கூட்டணி அரசுக்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால், கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா? என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Iniyan
ஜூன் 29, 2024 20:42

இந்த பச்சோந்தி வேலையை ஆரம்பித்து விட்டார்


தமிழ்வேள்
ஜூன் 29, 2024 19:48

நிதி ஆயோக் அமைக்கப்பட்டபோதே மாநில சிறப்பு அந்தஸ்து இனிமேல் கிடையாது என்று கூறித் தான் அமைக்க பட்டது... சிறப்பு உதவி தொகை வளர்ச்சியை ஊக்குவிக்காது..மாறாக ஆளுங்கட்சி ஊழலை ஊக்குவிப்பு செய்யும்


Barakat Ali
ஜூன் 29, 2024 18:57

முதல்ல பாலங்கள் கட்டியதில் அடிச்ச கொள்ளையை அரசு கருவூலத்தில் திரும்ப கட்டு ....


Indian
ஜூன் 29, 2024 17:49

தமிழ் நாட்டில் இருந்து வரி பணத்தை பிரித்து பிஹாருக்கு கொடுத்துடுவோம்


Indian
ஜூன் 29, 2024 17:47

பிஹாருக்கும் உ பி கும் ஒரு பத்து லக்ஹசம் கோடி பணம் கொடுத்து விட்டு , தென் மாநிலத்தை காய விட்டுடுவோம்


pmsamy
ஜூன் 29, 2024 17:36

மாற்றுத்திறனாளி போல பாஜக சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் காலில் நிற்கிறது


beindian
ஜூன் 29, 2024 17:32

நிதிஷ் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்போலும்


Vijay D Ratnam
ஜூன் 29, 2024 16:31

சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார். தெலுங்கானாவில் ஏற்கெனவே கேட்டு இருக்கிறார்கள். சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் எல்லா மாநிலத்துக்கும் கேட்கிறார்கள். அட கருமம் தம்மாத்துண்டு இருக்குற பாண்டிச்சேரி கூட கேட்கிறார்கள். இப்போ நிதிஷ் குமார் பிஹாருக்கு கேட்கிறார். இது ஒரு சப்ப மேட்டரு. மோடி இதை எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஜஸ்ட் லைக் தட் தீர்த்து வைக்கலாம். இந்தியாவில் உள்ள எல்லா மாநில சட்டமன்றத்திலும் சிறப்பு அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்க வைத்து விட்டால் ப்ராப்ளம் சால்வ்டு.


pmsamy
ஜூன் 29, 2024 17:35

மோடி சொல்றதெல்லாம் கேட்க எந்த மாநிலத்திலும் இந்த கட்சியும் இல்லை


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 16:23

தொற்றுநோயின் துவக்கமாக இருக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை