உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பயங்கரவாதத்தை ஒழிக்க 3வது முறையாக மோடி பிரதமர் ஆகணும்": அமித்ஷா பேச்சு

"பயங்கரவாதத்தை ஒழிக்க 3வது முறையாக மோடி பிரதமர் ஆகணும்": அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: காஷ்மீருக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த பிறகு, ஒரு கல்வீச்சு சம்பவம் கூட நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

நக்சலைட் தாக்குதல்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும்.

ஓட்டு வங்கி

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி ஓட்டு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு முடிவுகளை எடுத்தார். இரண்டு கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்க நாட்டு மக்கள் முடிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

K.n. Dhasarathan
ஏப் 27, 2024 21:57

மோடி மூன்றாவது முறை வர கூடாது, ஏன் என்பதற்கு காரணங்கள் : ௧ பண மதிபிழப்பு என்று கொண்டுவந்து பேர் உயிர் போனது, இதுவரை என்ன பயன் ? யார் இந்த அதி அற்புதமான யோசனை கொடுத்தது ௨ பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் என்றார்,ஆனால் இரண்டு மடங்காக ஏற்றி விட்டார் பிறகு விலைவாசி கூடத்தானே செய்யும் ௩ பொய் ஜே பி அல்லாத மாநிலங்களுக்கு குடைச்சல் கொடுப்பது, கவர்னரை வைத்து மிரட்டுவது கொடுக்க வேண்டிய நிதி நிவாரணங்களை கொடுக்காமல் வஞ்சிப்பது, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் வெல்ல பாதிப்பு நிகழ்ந்தபோது ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி உச்ச நீதி மன்றம் குட்டு வைத்தபோது பெயரளவுக்கு எதோ % குறைவாக கொடுப்பது இவர் எதோ மன்னர் போலவும் மக்கள் பிச்சைக்கார்கள் போலவும் மோசமான நடத்தை ௪ பயங்கரவாதத்தை ஒழிப்பவர் பக்கத்து நாட்டுடன் ஏன் பேச மறுக்கிறார், பாக்கிஸ்தான், சீனா இலங்கை நம்மை மிரட்டுகிறார்கள் மீனவர்களை அடித்து, படகுகளை சேதப்படுத்துவது பற்றி ஒரு நாள் பேசியிருப்பாரா? இவர் வேண்டாம்


Jagan
ஏப் 27, 2024 22:45

Very true 10 years suffering is enough


P Sundaramurthy
ஏப் 27, 2024 19:18

சிங்கத்தின் பசிக்காக கழுதையை ஓட்டிவந்த நரியின் கதைதான் நினைவுக்கு வருகிறது


J.V. Iyer
ஏப் 27, 2024 18:27

கண்டிப்பாக பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் இதற்காக எல்லை தாண்டியும் செயல்படலாம் உள்நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களும் பாயங்கரவாதிகளே இஸ்ரேல் அரசு, ராணுவம் போன்று செயல்பட்டால்தான் இது நடக்கும்


Priyan Vadanad
ஏப் 27, 2024 18:23

தெரியாமல்தான் கேட்கிறேன் கொஞ்சங்கூட கூச்ச நாச்சம் இல்லையா? காங்கிரஸ்காரர்களைத்தான் கேட்கிறேன் ஏன் இப்படி நமது பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் புலம்ப வைக்கிறீர்கள்? கொஞ்சங்கூட உங்களுக்கு இரக்கமே இல்லையா? பொய்களை மட்டுமே பேசுகிறர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் மதம் பற்றிய பேச்சும் வெறுப்பு பேச்சும் மட்டுமே பேசுகிறார்கள் என்பதும் தெரியும் உங்களுக்கு திறமையில்லாமல் மற்ற நாடுகளிடமிருந்து கொஞ்சமாக கடன் பெற்றீர்கள் இப்போது பத்து வருடங்களில் ஒன்றரை லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியது அவர்களது திறமைதானே நீங்கள் ஏன் புழுங்குகிறீர்கள்? இதையெல்லாம் வெளிப்படுத்தி சும்மா சும்மா பிரதாமரையும், உள்துறையையும் கலவரப்படுத்தாதீர்கள்


Srinivasan Krishnamoorthi
ஏப் 27, 2024 18:13

சிற்றறிவாளர் கட்சிகள் எவ்ளோ வருஷம் ஆட்சில இருந்தாலும் நீதி துறை மெல்ல செயல் படும் & வித்தியாசமக செயல்படும் நம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பது கஷ்டம் தான் உதாரணத்துக்கு : பயங்கரவாத செயல் இல்லை ராஜிவ் கொலை என கருதியோ என்னவோ, அதற்கு காங்கிரஸ் திமுக மதிமுக திருமா கட்சிகள் விடுதலை கேட்டு நீதி மன்றமும் விடுதலை தீர்ப்பு கொடுக்கிறது இதுவே மேலை நாடுகளில் இங்கிலாந்து நீங்கலாக நீதி துறை % மின்சார நாற்காலிக்கு அனுப்பி இருக்கும்


என்றும் இந்தியன்
ஏப் 27, 2024 18:05

பயங்கரவாதத்தை மோடியால் ஒழிக்கமுடியாது???ஏன்??இந்த வருடம் வரை அவர் என்ன சட்டம் கொண்டு வந்தார் அதை ஒழிக்க???மிக மிக மிக சிறிய சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன் அவர்களிடம் சொத்து ஏதாவது இருந்தால் அதை இந்திய அரசு கருவூலத்திற்கு மாற்றப்படும் "இந்த சட்டம் கொண்டு வந்திருந்தால் எல்லா பயங்கரவாதிகளும் அல்லாஹ்வின் சொர்க்கத்தில் கன்னிகைகள் அவர்களை வரவேற்க அங்கு சென்றிருப்பார்கள் பயங்கரவாதிகள் பற்றாக்குறை உலகெங்கும் தலை விரித்தாடியிருக்கும்


Kumar
ஏப் 27, 2024 17:31

மீண்டும் வேண்டும் மோடி ஆட்சி


venugopal s
ஏப் 27, 2024 16:01

ஏற்கனவே பத்து வருடங்களாக நீங்கள் செய்தது போதும்!


thangavel
ஏப் 27, 2024 17:25

correct


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி