மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
புதுடில்லி:புற்றுநோய், நீரிழிவு நோய்க்கான போலி மருந்துகளை கடத்தியது தொடர்பாக சிரியா நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் 4ம் தேதி பகீரத் பேலஸில் போலீசார் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு போலி மருந்துகளை இறக்குமதி செய்து, ஒரு கும்பல் சப்ளை செய்து வருவது தெரிய வந்தது.இந்த விவகாரத்தில் சிரியாவைச் சேர்ந்த மோனிர் அகமது, 54, என்பவரை கடந்த மாதம் 14ம் டில்லி ரயில் நிலையத்தில் வைத்து பொறிவைத்து போலீசார் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், நவீன் ஆர்யா, 40, சவுரப் கார்க், 34, கரண் கனேஜா, 27, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த கும்பல் புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
4 hour(s) ago | 1
10 hour(s) ago | 2