மேலும் செய்திகள்
சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்
3 hour(s) ago
பா.ஜ.,வுக்கு பிடிக்கவில்லை!
3 hour(s) ago
பெங்களூரு : ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி, ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்ய முயற்சித்த இருவருக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இந்தியாவில் 2016ல், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, ஆர்.பி.ஐ., ரத்து செய்தது. ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக, விதிமுறைகள் வெளியிட்டது. இதன்படி ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியது.பல்லாரி, ஹொஸ்பேட்டின் டியாம் சாலையில் எஸ்.பி.எம்., வங்கி கிளையின் முன்னாள் தலைமை காசாளர் கோபால கிருஷ்ணா, எல்.ஐ.சி., ஏஜன்ட் ராகவேந்திரா ஆகியோர் ஆர்.பி.ஐ.,யின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்தனர்.இது தொடர்பாக, ஆர்.பி.ஐ., அதிகாரிகள் அளித்த புகாரின்படி, சி.பி.ஐ.,யில் வழக்கு பதிவானது. விசாரணையை முடித்த அதிகாரிகள், பெங்களூரின் சி.பி,ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கின் முதல் குற்றவாளியான கோபால கிருஷ்ணாவுக்கு, 2.10 லட்சம் ரூபாய்; இரண்டாவது குற்றவாளியான ராகவேந்திராவுக்கு 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago