உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்ணை குட்டைக்கு 50 சதவீதம் மானியம்

பண்ணை குட்டைக்கு 50 சதவீதம் மானியம்

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை யில் பா.ஜ., உறுப்பினர் கேசவ் பிரசாத் பண்ணை குட்டைகள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு,விவசாய அமைச்சர் செலுவராயசாமி அளித்த பதில்:விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி கேட்டு, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.விவசாயிகளின் நலன் கருதி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், விவசாய நிலத்தில் பண்ணை குட்டை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிதாக பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகள், குட்டையின் அருகே கம்பி வேலிகள் அமைக்க வேண்டும். பண்ணை குட்டை அமைக்கும் எஸ்.சி., - எஸ்.டி., சமூக விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி