உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயக நாட்டில் 66% ஓட்டுப்பதிவு சிறந்தது தான்: தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மகிழ்ச்சி

ஜனநாயக நாட்டில் 66% ஓட்டுப்பதிவு சிறந்தது தான்: தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கடந்த இரண்டு கட்ட ஓட்டுப்பதிவும் குறைந்த அளவில் பதிவாகவில்லை. ஜனநாயக நாட்டில் 66 சதவீதத்திற்கு மேலான ஓட்டுப்பதிவு என்பது சிறந்தது தான்' என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=es0et43s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுடில்லியில் இன்று சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மே 7ம் தேதி மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குடிநீர் மற்றும் அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். மக்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறோம்.

66 சதவீதம்

கடந்த இரண்டு கட்ட ஓட்டுப்பதிவும் குறைந்த அளவில் பதிவாகவில்லை. ஜனநாயக நாட்டில் 66 சதவீதத்திற்கு மேலான ஓட்டுப்பதிவு என்பது சிறந்தது தான். நிச்சயமாக, மூன்றாம் கட்ட தேர்தல் 66 சதவீதத்திற்கு அதிகமாக ஓட்டுகள் பதிவாகும். எங்கள் அழைப்பின் பேரில், 23 நாடுகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்கள் தேர்தல் பிரசாரங்களை காண வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. அவர்கள் இந்தியாவில் ஜனநாயக திருவிழா எப்படி வெளிப்படையாகக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்க்க வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
மே 06, 2024 08:24

ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று அறிஞர் அண்ணாவின் வாக்குறுதி ஞாபகம் வருகிறது!


தாமரை மலர்கிறது
மே 05, 2024 23:09

நமது தேர்தல் ஆணையம் தான் உலகிலேயே மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது அதனால் தான் உலகநாடுகள் இந்திய ஜனநாயகத்தை கண்டு ரசிக்க வருகிறார்கள் அனைத்தும் மோடியால் தான் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை ஜூன் நாலாம் தேதி நானூற்றி ஐம்பது தொகுதிகளை கொத்தாக மோடி ஜெயித்து விட்டார் என்று அரை மணி நேரத்தில் நமது தேர்தல் ஆணையர் சொல்ல போகிறார் எதிர்க்கட்சிகள் கதறி அழ போகின்றன அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்து நூறு கோடி பிஜேபி தொண்டர்கள் கொண்டாட போகிறார்கள்


Anbuselvan
மே 05, 2024 20:45

நூறு சதவிகித வோட்டு பதிவுதான் எங்களது குறிக்கோள் அது இது என்பதெல்லாம் இப்போதைக்கு காற்றில் போய் விட்டதா மாநில தேர்தல் ஆணையர் அலுவலர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவியுங்கள் வோட்டு சதவிகிதம் தானாக உயரும் முதலில் சதவிகிதம் வோட்டுக்கள்தான் பதிவாகி உள்ளன என்றும் பிறகு இல்லை இல்லை சதவிகிதம் தான் பதிவாகி ள்ளது என இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் கூறுவது நம்பக தன்மையை குறைக்கும் ஒழிய ஏற்றாது முதலில் இந்தியாவிற்கு வேண்டியாது தேர்தல் சீர்திருத்தம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம் நடக்குமா? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்


அப்புசாமி
மே 05, 2024 19:08

எ.சி ரூமில் உக்காந்துக்கிட்டு வேகாத வெயிலில் தேர்தலை வெக்கும் தத்திகள். 50 பர்சண்ட் விழுந்தாலே ஆனந்தம்தான்.


Godfather_Senior
மே 05, 2024 18:30

தேர்தல் திருவிழா காண வெளிநாட்டினர் வருகை அப்போ அடுத்த எலெக்ஷனிலே தேர்தல் திருவிழா சுற்றுலாவா மாத்திடலாமா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை