உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 7 மாதத்தில் விபத்தில் 6,797 பேர் பலி

கர்நாடகாவில் 7 மாதத்தில் விபத்தில் 6,797 பேர் பலி

பெங்களூரு : கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, ஏழு மாதங்களில் நடந்த விபத்துகளில் 6,797 பேர் உயிரிழந்து உள்ளனர்.கர்நாடகாவில் நடக்கும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில், கர்நாடகாவில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களில் நடந்த, விபத்துகளில் 6,797 பேர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7,233 பேர் உயிரிழந்து இருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு உயிரிழப்பு குறைந்து உள்ளது. விபத்தில் பெங்களூரில் மட்டும் 65 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஏழு மாதத்தில் 72 பேர் இறந்தனர். இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி., அலோக்குமார் கூறுகையில், ''கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.''சாலை விபத்துகளை தடுக்க நாங்கள், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவனமாக வாகனம் ஓட்டினால், விபத்துகள் ஏற்படுவதை வெகுவாக குறைக்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ