மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
புதுடில்லி: டில்லியில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் 10 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டியதால், நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மழை, வெள்ளம் தொடர்பான பாதிப்புகளில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர். டில்லியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகள் நிரம்பி வழிந்தன. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.இதனால், பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதால் டில்லி முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சப்ஜி மண்டி பகுதியில், வீடு இடிந்து விழுந்தது உட்பட கடந்த இரண்டு நாட்களில் மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர். இந்த திடீர் மழைக்கு மேகவெடிப்பே காரணம் என கூறப்பட்டது. ஆனால், அதை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:கடந்த 31ம் தேதி இரவு சப்தர்ஜங்கில் 10.7 செ.மீ., மழை பதிவானது. மயூர் விஹாரில் 14.7 செ.மீ., நஜப்கர் மற்றும் ரிட்ஜில் 11.3 செ.மீ., மழை பதிவானது.லோடி சாலையில் 10.6 செ.மீ., டில்லி பல்கலையில் 10.4 செ.மீ., மழை பெய்துள்ளது. ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் 10 செ.மீ.,க்கு மழை பதிவாகியுள்ளது, காற்றழுத்த தாழ்வுநிலையின் வகையைச் சார்ந்ததே ஆகும். இது மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை அல்ல. முன்னதாக டில்லிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது. பின்னர், அது அதி கன மழைக்கான ரெட் அலெர்டாக மாற்றப்பட்டது.மழை பொழிவு குறைந்ததை அடுத்து நேற்றும், இன்றும் மிதமான மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு மழை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago