உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் 2 டாக்டர் உட்பட 9 பேர் கைது

மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் 2 டாக்டர் உட்பட 9 பேர் கைது

புதுடில்லி:டில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் இரு மூத்த டாக்டர்கள் உட்பட 9 பேரை, லஞ்ச வழக்கில் சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.டில்லி ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையின் இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் அஜய் ராஜ், உதவிப் பேராசிரியர் பர்வத கவுடா சன்னப்பகவுடா ஆகிய இருவரும், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கு@

@இதுகுறித்து, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.இதையடுத்து டாக்டர்கள் அஜய் ராஜ், பர்வத கவுடா ஆகிய இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.மேலும், கவுடாவுக்கு 2.48 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த 'நாக்பால் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தை சேர்ந்த நரேஷ் நாக்பால், டாக்டர் அஜய் ராஜுக்கு லஞ்சம் கொடுத்த 'பாரதி மெடிக்கல் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பரத் சிங் தலால், 'கேத் லேப்' நிறுவன அப்ரார் அகமது, ரஜ்னிஷ் குமார், புவல் ஜெய்ஸ்வால், சஞ்சய் குமார், விகாஸ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

டாக்டர்களை பணி நியமனம் செய்ய பூவல் ஜெய்ஸ்வால் லஞ்சம் வாங்கியதாகவும், போலி மருத்துவச் சான்றிதழுக்காக சஞ்சய் குமார் லஞ்சம் வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் வரும் 14ம் தேதி வரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.மருத்துவ உபகரண சப்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிய சப்தர்ஜங் அரசு மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மணீஷ் ராவத் கடந்த ஆண்டு சிக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை