மேலும் செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
4 minutes ago
தொட்டபல்லாபூர்: தோட்டத்தில் பாம்பு கொத்தியதில் ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.தொட்டபல்லாபூரின் டி.ஹொசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமாஞ்சி - வினோதம்மா. இவர்களின் மகள் அனுஷா, 7. தம்பதி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் கோலுார் கிராமத்தில் தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களின் மகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது அவரை பாம்பு கடித்தது. இதை சாதாரணமாக நினைத்து சிறுமி விட்டுவிட்டார். ஆனால் நேரம் ஆக, ஆக சோர்வடைந்தார். இதை பார்த்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுமி உயிரிழந்தார்.
4 minutes ago