உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவகத்தில் தீ விபத்து

உணவகத்தில் தீ விபத்து

இந்தியா கேட்: பண்டாரா சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்தியா கேட் அருகே பண்டாரா சாலையில் உள்ள வெஜ் குலாட்டி என்ற உணவகத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.வெஜ் குலாட்டி உணவகத்தின் உட்காரும் பகுதியில், நேற்று அதிகாலை 2:48 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து முதல் தளத்திற்கு தீ பரவியது.தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டது. சில பொருட்கள் தீயில் நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ