உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி

சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி

பன்னர்கட்டா, : தாறுமாறாக ஓடிய பி.எம்.டி.சி., பஸ் மோதி, சாலையோரம் நின்றவர் உயிரிழந்தார்.பெங்களூரு, பன்னர்கட்டாவில் இருந்து மெஜஸ்டிக் நோக்கி, பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது.பன்னர்கட்டா அருகே ஜங்கிள் பாளையா பகுதியில் வந்தபோது, திடீரென ஒருவர் பைக்கில் குறுக்கே வந்தார். பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, இன்னொரு பைக், சரக்கு ஆட்டோ மீதும், சாலையோரம் நின்றவர் மீதும் மோதியது.ஆந்திராவை சேர்ந்த பிரசாத் ராவ், 60, என்பவர் இறந்தார். பைக், சரக்கு ஆட்டோவில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பன்னர் கட்டா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை