மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
அர்ச்சகரே இல்லாத கோவில் ஒன்றில், தினமும் தவறாமல் பூஜை நடக்கிறது. பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மனம் உருகி வேண்டுகின்றனர். இத்தகைய அதிசய கோவில் சிர்சியில் அமைந்துள்ளது.பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும், அர்ச்சகர் இருப்பார். சில இடங்களில் இரண்டு, மூன்று அர்ச்சகர்களும் இருப்பதுண்டு. கோவில்களில் மூன்று கால பூஜைகள் நடத்துவர். ஆனால் அர்ச்சகரே இல்லாத கோவில் ஒன்றில், தினமும் 80க்கும் அதிகமான பூஜைகள் நடக்கின்றன. திறந்த வெளியில் அமர்ந்துள்ள விக்ன விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.உத்தரகன்னடா, சிர்சியின், பென்டேகத்தே அந்தள்ளி சாலையில், திறந்த வெளியில் விக்ன விநாயகர் கோவில் உள்ளது. சுற்றிலும் பச்சை பசேல் என்ற வனப்பகுதியில், மாமரத்தின் அடியில் விநாயகர் குடிகொண்டுள்ளார். கோவிலுக்கு அர்ச்சகர் இல்லை. பக்தர்கள், தங்கள் கையால் பூஜித்து, விநாயகரை பக்தியுடன் வணங்குகின்றனர். தினமும் 80க்கும் மேற்பட்ட பூஜைகள் நடக்கின்றன.ஏழை, செல்வந்தர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து ஜாதியினரும் வருவதே, கோவிலின் சிறப்பாகும். நுாற்றாண்டுகளுக்கு முன்பே, பக்தர்களே பூஜிக்கும் நடைமுறை, செயல்பாட்டில் உள்ளது. புட்டனமனே, ஹாரபாலா, தேவரகொப்பா, ஹுத்தாரா கிராமத்தினர் மட்டும் கோவிலுக்கு வந்தனர். ஆனால், இப்போது மாநிலம் முழுதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.நுாற்றாண்டுகளுக்கு முன், திண்ணையில் மாமரம் அடியில் இருந்த கற்சிலைக்கு பூஜைகள் நடந்தன. 50 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு கோவில் கட்ட பக்தர்கள் ஆலோசித்தனர். ஆனால் சுவர்ணவல்லி மடத்தின், முந்தைய மடாதிபதியான சர்வக்ஞேந்திர சரஸ்வதி சுவாமிகள், 'திறந்த வெளியில் குடிகொண்டுள்ள விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டாம். திண்ணையில் ஒரு கல்லையும் எடுக்காமல், கோவிலை மேம்படுத்துங்கள் என, அறிவுறுத்தினார். அதன்படி கோவில் கட்டாமல், அதன் சுற்றுப்பகுதி மேம்படுத்தப்படுகிறது.பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், கோவிலுக்கு மணி அர்ப்பணிப்பது ஐதீகம். தற்போது கோவிலில் 5,000த்துக்கும் மேற்பட்ட மணிகள் உள்ளன. கோவிலில் கிடைக்கும் வருவாய், இதே கோவில் வளர்ச்சிக்கும், கிராமத்தின் லட்சுமி நரசிம்மர், ஹுலியப்ப சுவாமி கோவிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. விக்ன விநாயகர் கோவில் டிரஸ்ட் தலைவர் மஹாபலேஸ்வர ஹெக்டே ஹுலிமனே கூறியதாவது:திறந்த வெளியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அனைவரின் சொத்து. கோவிலில் பூஜை செய்ய அர்ச்சகர் இல்லை. பக்தர்களே பூஜிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது.கடைக்காரர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், போலீசார் உட்பட பலரும் கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர். சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யும் பக்தர்கள், தங்களுடன் அர்ச்சகரை அழைத்து வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகையில் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து, பூஜை செய்வர். ஆண்டு தோறும் கார்த்திகை மாதமும், விநாயகர் சதுர்த்தியின் போதும், தீபோற்சவம் நடக்கும். அந்ந நாட்களில் அர்ச்சகரை வரவழைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர்
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago