| ADDED : மார் 25, 2024 06:56 AM
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உருவப்படத்துடன், அயோத்தி சென்ற ரசிகர், ராமர் கோவிலில் தரிசனம் செய்து உள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார், 46. கடந்த 2021ல் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவை, ரசிகர்களால் இன்னமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள், நினைவுநாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் பெரிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளில், புனித் ராஜ்குமார் உருவப்படத்துடன் ரசிகர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான முரளி என்பவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று உள்ளார். புனித் ராஜ்குமார் உருவப்படத்தை எடுத்துச் சென்ற அவர், அந்த உருவப்படத்தின் மேல், சராயு நதியின் தண்ணீரை ஊற்றினார். பின்னர் ராமர் கோவில் வாசலுக்கு முன், உருவப்படத்தை வைத்து வழிபட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.- நமது நிருபர் -