உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடாவடி ஐ.ஏ.எஸ்., அதிரடி மாற்றம்

அடாவடி ஐ.ஏ.எஸ்., அதிரடி மாற்றம்

மும்பை, அரசு கார்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிவப்பு - நீல சுழல் விளக்கை, தன் சொகுசு காரில் பயன்படுத்திய பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர், யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தைப் பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் கார்களில் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், பூஜா தன் சொந்த 'ஆடி' காரில், 'மஹாராஷ்டிரா அரசு' என்ற பெயர் பலகையுடன், சிவப்பு - நீல சுழல் விளக்குடன் வலம் வந்தார். கூடுதல் கலெக்டர் அஜய் மோரே இல்லாத நேரத்தில் அவரது அறையை ஆக்கிரமித்ததுடன், அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளார். அறையின் வாயிலில் தன் பெயரில் பெயர் பலகை வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். உதவி கலெக்டரின் அலட்டல்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அவர் புனேவிலிருந்து வாஷிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜூலை 11, 2024 07:59

அடங்க மறு ..... அத்து மீறு பெண்மணியோ ????


Barakat Ali
ஜூலை 11, 2024 07:59

மக்கள் வரிப்பணத்தில் எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை