உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீராம் அமைச்சர் செலுவராயசாமி தகவல்

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீராம் அமைச்சர் செலுவராயசாமி தகவல்

மாண்டியா : ''காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை விட, அதிகமான தண்ணீர் தமிழகத்துக்கு பாய்ந்து சென்றுள்ளது,'' என விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கபினி நீர்ப்பாசன பகுதிகளில், நல்ல மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே 18,000 முதல் 20,000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு பாய்ந்து சென்றுள்ளது.இதே போன்று, 10 நாட்கள் மழை நீடித்தால் தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து விட வேண்டிய, தண்ணீரின் கோட்டா முடியும். ஹேமாவதி அணையிலும், தண்ணீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் இன்னும் நான்கைந்து நாட்களில் நிரம்பும் வாய்ப்புள்ளன.கே.ஆர்.எஸ்., தற்போதைக்கு நிரம்பவில்லை. 104 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஏரி, கால்வாய்களுக்கு திறந்து விட முடியவில்லை. ஜூலை 15 க்கு பின், நெல் விளையும் பணிகள் துவக்க வேண்டும். ஆனால் தண்ணீர் இருப்பை கவனித்து, பயிரிடும்படி விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மூடா வீட்டுமனை வழங்கியதில், முதல்வர் சித்தராமையா எந்த முறைகேடும் செய்யவில்லை. அவரது மனைவி பெயரில் உள்ள நிலத்தை, மூடா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி, வீட்டுமனைகளாக்கி விற்றுள்ளது. இதை ஒப்பு கொண்டு, மாற்று மனை வழங்கினர்.பா.ஜ., ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை மூடி மறைக்க, சித்தராமையா மீது குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 15, 2024 07:11

கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்று உறுதியாக இருக்கும் நிலை இவர்கள் மேகதாட்டு அணையை எப்படி கட்ட முடியும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி