உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26 ஆண்டுகளுக்கு பின் கைவசமான தாவணகெரே

26 ஆண்டுகளுக்கு பின் கைவசமான தாவணகெரே

தாவணகெரே லோக்சபா தொகுதியில், 1998ல் காங்கிரசின் சாமனுார் சிவசங்கரப்பா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 1999ல் நடந்த தேர்தலில் பா.ஜ.,வின் சித்தேஸ்வர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 26 ஆண்டுகளாக, தாவணகெரேயை, பா.ஜ., கோட்டையாக வைத்திருந்தார்.இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளராக சாமனுார் சிவசங்கரப்பாவின் மருமகளும், தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் மனைவியுமா பிரபா போட்டியிட்டார்.தற்போது பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள சித்தேஸ்வர் மனைவி காயத்ரி போட்டியிட்டார். ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில், முன்னணியில் இருந்த காயத்ரி, நேரம் ஆக, ஆக பிரபா மல்லிகார்ஜுன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் வந்தார்.நிறைவில், 26,094 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரசின் பிரபா வெற்றி பெற்றார். 26 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தாவணகெரேயை, காங்கிரஸ் தனது வசமாக்கி கொண்டது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ