உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜித்பவார் தேர்தல் யாத்திரை

அஜித்பவார் தேர்தல் யாத்திரை

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தலையொட்டி தேசியவாத காங்.,கட்சி தலைவர் அஜித்பவார் ‛ஜன் சன்மான் யாத்திரை துவக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.இம்மாநிலத்திற்கு விரைவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ,பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எதிர்க்கட்சியான ‛‛மஹா விஹாஸ் அகாடி'' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் உள்ளிட்ட கட்சிகள், இந்த சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளன. இந்நிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., கட்சி எம்.பி. சுனில் தாக்கரே கூறியது, வரும் 8-ம் தேதி நாசிக் நகரிலிருந்து ஜன் சன்மான் யாத்திரையை அஜித் பவார் துவக்குகிறார். இந்த யாத்திரை விதர்பா, மரத்வாடா உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் வழியாக நடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAJA68
ஆக 06, 2024 11:18

வயதான காலத்தில் எதற்கு இந்த விஷ பரீட்சை. எப்படி இருந்தாலும் நீங்கள் தோற்கப் போவது நிச்சயம்.


MADHAVAN
ஆக 06, 2024 10:43

அஜித்பவர் செய்த ஊழலுக்கு துணைபோன பிஜேபி, அதிமுக மாதிரி ஊழல் கட்சிக்கு முட்டு குடுத்த பிஜேபி இனிமேல் ஊழலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிவிடும் என நம்புவோம்,


மேலும் செய்திகள்









புதிய வீடியோ