உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

புதுடில்லி: டில்லியில் தேர்தல் அதிகாரிகளை இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சந்தித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன்4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தேர்தல் அதிகாரிகளை இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kzcst9x6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

3 முக்கிய பிரச்னைகள்

பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்கள் சந்திப்பில், '' 3 முக்கிய பிரச்னைகள் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். ஓட்டு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தபால் ஓட்டுகளை முதலில் எண்ணி, அதன் முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும். தபால் ஓட்டுகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு ஓட்டுப்பதிவு இயத்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். தபால் ஓட்டுகள் முடிவை தெரிவிக்காமல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அறிவிப்பது சட்டத்துக்கு எதிரானது'' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Swaminathan L
ஜூன் 03, 2024 16:05

மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதில், கூட்டுவதில் மோசடி நடக்க வாய்ப்பில்லை. தபால் ஓட்டுகள் கிட்டத்தட்ட 26-27 இலட்சம் எண்ணப்படுவதில் மோசடி நடக்கலாம் என்று இண்டி கூட்டணி எண்ணுகிறது. தற்போதைய நெறி முறைப்படி, தபால் ஓட்டுகள் எண்ண ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்து இயந்திர ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கி நடக்கும் என்பதால் ஓட்டுகள் எண்ணிக்கை வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், முதலில் தபால் ஓட்டுகளை முழுவதுமாக எண்ணி முடிவுகளை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பேசும் தமிழன்
ஜூன் 03, 2024 08:01

அய்யா எப்படியாவது... மோடி தோற்று விட்டதாக கூறுங்கள் என்று கோரிக்கை மனு கொடுத்து இருப்பார்களோ? நாட்டு மக்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகளானா உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் சொல்லி இருக்கும் போல் தெரிகிறது.. எப்போதும் தேச விரோத... தீவிரவாத கும்பலுக்கு ஆதரவான பேச்சு... பிறகு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் ???


Anbuselvan
ஜூன் 02, 2024 22:39

ஆமாம். ஆமாம். இங்கே மூன்று முறை வோட்டு சதவிகித்ததையே மாற்றி மாற்றி கூறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பின்னனணியில் இருக்கும் கட்சிகளை அடையாளம் கண்டு அந்த கட்சியை தேர்தலில் போட்டி இடுவதிலிருந்து ஒரு 10 வருடங்களுக்காவது தடை செய்ய வேண்டும்


theruvasagan
ஜூன் 02, 2024 22:20

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது.சாக்கு. மோடி செய்த தியானத்தால் வாக்கு இயந்திரத்தில் எங்களுக்கு விழுந்த ஓட்டுக்கள் பாஜக ஓட்டுகளாக மாறிவிட்டன என்று கூட புகார் குடுப்பாங்க இந்த வெட்டி கும்பல்.


Duruvesan
ஜூன் 02, 2024 21:48

அப்போ தீயமுக, காங்கிரஸ் ஜெயிச்சது எல்லாம் இப்படி தானா?


பேசும் தமிழன்
ஜூன் 02, 2024 21:21

எப்படியும் தோற்க்க போகிறீர்கள்.... என்ன காரணம் சொல்லலாம் என்று தேடி கொண்டு இருக்கிறார்கள்...... இந்தி கூட்டணி ஆட்கள் !!!


Anantharaman Srinivasan
ஜூன் 02, 2024 20:56

கையா காவியா யார் அம்பேல் செவ்வாய் கிழமை தெரிய போகுது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 02, 2024 20:46

தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு புகழ்பெற்ற திமுகவின் பாலு கோரிக்கை வைப்பது மகா கேவலம். கள்ள ஓட்டு போட சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் திமுகவினர். திருமங்கலம் பார்முலாவை மறக்கமுடியுமா. தேர்தல் திருடர்கள் திமுகவினர் செய்யும் தில்லு முல்லுகளில் இதுவும் ஒன்று.


indi for india
ஜூன் 02, 2024 20:45

அப்போ திருமங்கலம் ஃபார்முலா ஈரோடு ஃபார்முலா ஓகேவா


sankaranarayanan
ஜூன் 02, 2024 20:39

தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது வேலியே ஓணானை மேய்ந்தாற்போலத்தான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி