உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 மாநிலங்கள், 14 மாவட்டங்கள், 8 ரயில் திட்டங்களுக்கு ரூ.24,657 கோடி ஒதுக்கீடு

7 மாநிலங்கள், 14 மாவட்டங்கள், 8 ரயில் திட்டங்களுக்கு ரூ.24,657 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்கள் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில் திட்டங்களுக்கு மத்தியஅரசு ரூ.24,657 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் கூறி உள்ளார்.மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிஇருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலானா பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,657 கோடி மதிப்பீட்டில் எட்டு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் எட்டு திட்டங்கள் மூலம் 900 கி.மீ.,க்கு ரயில் சேவை விரிவு படுத்தப்படும். மேலும் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அற்புதராஜ்
ஆக 10, 2024 21:33

ஆக்சிடெண்ட்களுக்கு கணிசமா நிதி ஒதுக்கினீங்களா சாமீ?


Ramesh Sargam
ஆக 10, 2024 21:08

இந்தியாவில் எவ்வளவு புதிய ரயில்கள் விட்டாலும் ஒரு சில தடங்களில் டிக்கெட் கிடைப்பது மிக மிக அரிது.


K.n. Dhasarathan
ஆக 10, 2024 20:40

ரயில்வே அமைச்சருக்கு தமிழகத்தில் 19 ரயில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் கிடப்பில் கிடக்கின்றன, 7 புதிய மாற்றும் நீடிக்கப்பட்ட ரயில் வழி தடங்கல் அப்படியே கிடக்கின்றன.மக்கள் இன்னும் அவதிப்பட்டுதான் பயணிக்கிறார்கள், எப்போது தான் செய்யப்போகிறீர்கள்? புதிய திட்டங்களில் கவனமாக தமிழகம் ஒதுக்கப்பட்டு விட்டது. ஏன் ? வந்தே பாராட் மட்டும் அவசரமாக ஓடுகிறது, எப்படி ? புதிய வழி தடங்கல்கல் & ரயில்கள் கண்டிப்பாக தமிழகம் வராதா ? வழக்கம்போல பட்டைநாமம்தானா ? தமிழக வரி வருமானம் மட்டும் வேண்டுமா ? பதில் சொல்லுங்கள்.


N Sasikumar Yadhav
ஆக 10, 2024 21:16

கொடுக்கிற ரயில்வே நிலங்களை கொடுக்க சொல்லுங்க உங்க திராவிட மாடல் விடியாத இந்துமத துரோக திமுக கட்சியை


N Sasikumar Yadhav
ஆக 10, 2024 21:16

கொடுக்கிற ரயில்வே நிலங்களை கொடுக்க சொல்லுங்க உங்க திராவிட மாடல் விடியாத இந்துமத துரோக திமுக கட்சியை


ஆரூர் ரங்
ஆக 10, 2024 22:10

ஆனா அரசு பஸ்களின் அவலத்தைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லை. சரக்குப் போக்குவரத்து லாப வருமானத்தில்தான் பயணிகள் ரயில் இயக்க முடியும். சரக்கு ரயில்களுக்கு லாபம் தராத தமிழகதிற்கு புதிய திட்டங்கள் கிடைக்காது.


உதயநிதி
ஆக 10, 2024 22:48

நீ திருட்டு திராவிடத்துக்கு ஓட்டு போடு பிஜேபி கவர்மெண்ட் வந்து உனக்கு புதிய ரயில்வே தடம் போடுவான். திமுகவுக்கு ஓட்டு போட்ட நீங்க எல்லாம் சாவுங்கடா


venugopal s
ஆக 10, 2024 20:38

அது தானே பார்த்தேன், நான் கூட தமிழ்நாட்டுக் தான் ஏதோ புதிய ரயில்வே திட்டம் கொடுத்து விட்டாரோ என்று நினைத்து விட்டேன்!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை