உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய ஆம்ஆத்மி

சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய ஆம்ஆத்மி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திஹார் சிறையில் இருந்தபடி டில்லியை ஆட்சி செய்ய முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி, டில்லி ஐகோர்ட்டில், ஆத்ஆத்மி கட்சி சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மனுவில், ‛‛ஊடகங்களில் டில்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.சிறையில் இருந்து ஆட்சி செய்ய முதல்வருக்கோ, பிரதமருக்கோ அரசியல் அமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அசோகன்
ஏப் 18, 2024 11:51

திருட்டு நாடக கம்பெனியின் அடுத்த நாடகம்..........


மூர்த்தி
ஏப் 18, 2024 10:05

பொன்முடி மற்றும் கெஜ்ரிவால் போன்றவர்களைப் போல ஏன் ஜெயலலிதா அவர்களை நடத்தவில்லை? அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாத சமயத்தில் ஒரு மாநில முதல்வரை மக்கள் தலைவரை உடனடியாக அதுவும் வேறு மாநிலத்தில் கைது செய்து கொடூரமாக நடந்து கொண்டனர். அதன் பலன் ஒரு நல்ல தலைவரை இந்த நாடு இழந்தது.


Pugazh
ஏப் 18, 2024 08:54

இன்னும் எவ்வளவு கேவலமாக நடந்தாலும் நடவடிக்கை கடுமையாக போகாது என்று தெரிகிறது.


nv
ஏப் 18, 2024 08:07

இதையும் நாம் பார்க்க வேண்டிய நிலை!! கலி காலம்.. நம்முடைய நீதிமன்றங்கள் அய்யோ பாவம்


Jayaraman Pichumani
ஏப் 18, 2024 00:00

அநீதி எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்


Jayaraman Pichumani
ஏப் 18, 2024 00:00

அநீதி எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்


kulandai kannan
ஏப் 17, 2024 23:45

இதில் கேலிக்கூத்தானது அரசியலைவிட நீதிமன்றங்கள்தான்.


Ramesh Sargam
ஏப் 17, 2024 21:36

சிறையில் உள்ளவர்களுக்கு எந்தவித அதிகாரமும் கொடுக்க கூடாது முக்கியமாக ஆட்சி செய்யும் அதிகாரம்.


C.SRIRAM
ஏப் 17, 2024 20:33

ஒரே கேலி கூத்தா இருக்கு சிறையிலிருந்து ஆட்சி என்பதெல்லாம் மொள்ளமாரித்தனம்


வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2024 19:21

தலீவரே சூடா காஞ்சீபுரம் இட்லி தொட்டுக்க கெட்டிச்சட்னி , ரவாகேசரி , பாதாம் ஷேக் , கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் ஜெயில்லியே சப்ளை கேப்பேங்க கண்டிப்பா உண்டு சௌக்கியமா சாப்டுட்டு ஆட்சி பண்ணி அசத்திடலாம் வரானுங்க பாரு நமக்குன்னு ஹா ஹா ஹா...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி