மேலும் செய்திகள்
திசை திருப்பும் முயற்சி!
1 hour(s) ago
சாமியாரின் ஜாமின் மனு மீது திங்கள் கிழமை விசாரணை
2 hour(s) ago
பெங்களூரு: கர்நாடகாவில் டெங்கு அதிகரிக்கும் நிலையிலும், 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் டெண்டர் ரத்தாகி, ஏழு ஆண்டுகளாகியும் புதிய டெண்டர் வழங்குவதில், சுகாதாரத்துறை அலட்சியம் காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கரநாடகாவில் அவசர சந்தர்ப்பத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும், 'ஆரோக்கிய கவசம் 108' ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்க, 2007ல் ஜி.வி.கே., நிறுவனம் டெண்டர் பெற்றது. இந்நிறுவனம் பல குளறுபடிகளை செய்தது. மாதக்கணக்கில் பாக்கி
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, சரியாக ஊதியம் வழங்கவில்லை. மாதக்கணக்கில் பாக்கி வைத்தது. இதனால் ஓட்டுனர்கள் பணி நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்களை சரியாக பராமரிக்கவில்லை. அரசின் உத்தரவுபடி ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தவில்லை. இதுபோன்று பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால், ஒப்பந்த விதிகளை மீறியதாக, 2017ல் ஜி.வி.கே., நிறுவனத்தின் டெண்டரை, மாநில அரசு ரத்து செய்தது.அதன்பின் மூன்று முறை டெண்டர் அழைத்தும் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. எனவே 2019ல் ஜி.வி.கே., மற்றும் கிரீன் ஹெல்த் நிறுவனங்களுடன், தற்காலிகமாக ஒப்பந்தம் செய்து, மாநில அரசு ஆம்புலன்ஸ் சேவை வழங்குகிறது.ஏழு ஆண்டுகளாகியும், புதிதாக டெண்டர் அழைத்து ஆம்புலன்ஸ் நிர்வகிப்பு பணிகளை ஒப்படைப்பதில், சுகாதாரத்துறை ஆர்வம் காண்பிக்கவில்லை. இதன் விளைவாக சரியான நேரத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். தனியார் ஆம்புலன்ஸ்
ஏழைகள் வேறு வழியின்றி, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரு உட்பட, பல்வேறு நகரங்களில் டெங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் சேவை அவசியம். இதில் சுகாதாரத்துறை அக்கறை காண்பிக்கவில்லை.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்த பின், ஆம்புலஸ் சேவையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டது. 2023ன் ஜூலை 22ல் தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி அமைத்தது. கமிட்டியும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அறிக்கை அளித்து பல மாதங்களாகியும், புதிய டெண்டர் அழைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
1 hour(s) ago
2 hour(s) ago