உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா: குண்டூர் தொகுதி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.5785 கோடி

ஆந்திரா: குண்டூர் தொகுதி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.5785 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திரா மாநிலம் குண்டூர் எம்.பி., தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.5,785.28 கோடி மட்டுமே என தெரிவித்து உள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் பொது தேர்தலில் தற்போது வரையில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நாளை 13 ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 1,717 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவை தவிர ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துவிவர பட்டியலை வேட்பு மனுவுடன் அளிப்பது வழக்கம். அந்த வகையில் குண்டூர் எம்.பி.,க்கு போட்டியிடும் தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் தாக்கல்செய்துள்ள சொத்துமதிப்பு பட்டியல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.தெலுங்குதேசம் கட்சி சார்பில் குண்டூர் எம்.பி., க்கு போட்டியிடுபவர் சந்திரசேகர் பெம்மாசானி. இவர் அளித்துள்ள சொத்து விவர பட்டியிலில் தனக்கு அசையும் சொத்தாக ரூ.5,598 கோடி யும் அசையா சொத்தாக ரூ.106 கோடியும் உள்ளதாகவும், சுமார் ரூ.1038 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். 48 வயதாகும் பொம்மாசானி 1999-ல் விஜயவாடாவில் மருத்துவம் படித்தார். 2005-ல் பென்சில்வேனியாவில் எம்.டி படிப்பை முடித்துள்ளார். மேலும் யூ வேர்ல்டு என்ற ஆன்லைன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்போது முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். மைக்ரோசாப்ட், கோகோ-கோலா, உபெர் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் பொம்மாசானி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,700-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 476 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் . 24 வேட்பாளர்கள் தங்களிடம் எந்த சொத்தும் இல்லை என்றும் அறிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivakumar
மே 13, 2024 06:50

காட்சிபெயர் கூறாமல் வெறுமனே குண்டூர் வேட்பாளர் என்ற தலைப்பை பார்த்தவுடனே இது மத்தியில் ஆளும்கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சி வேட்பாளராகத்தான் இருக்கும் என நினைத்தேன், அதுவே சரியென வாசிக்கும்போது தெரிந்துகொண்டேன்


Kasimani Baskaran
மே 13, 2024 05:43

அங்கு அபகரிக்க ஆள் இல்லை போல தெரிகிறது


DARMHAR/ D.M.Reddy
மே 13, 2024 00:14

தனது வாழ்வின் இறுதி காலத்தில் கட்டு மரத்தார் வாய் பேச முடியாமல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த காட்சி பலருக்கும் நினைவு வரலாம் தன வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச்சுடும் என்ற முது மொழி நிஜமாகிவிட்டது


Saran
மே 12, 2024 22:43

The money of poor workers Help the poor people your generation will be safe and happy


Pandi Muni
மே 12, 2024 21:47

ஏழை பாவம் கட்டுமரத்தான் கும்பலுக்கு மாத வருமானமே , கோடி இருக்கும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ