உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுக்கெல்லாமா நாங்க பொறுப்பு; புலம்பித் தள்ளுகிறார் பி.டி.உஷா

இதுக்கெல்லாமா நாங்க பொறுப்பு; புலம்பித் தள்ளுகிறார் பி.டி.உஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் எடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அந்தந்த வீரர், வீராங்கனைகளே முழு பொறுப்பு என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 71வது இடத்தை பிடித்துள்ளது.

நழுவிய வாய்ப்பு

இந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

குற்றச்சாட்டு

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய தொடர்களில், வீரர்களின் எடை விவகாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டாமா? என்று எல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.

வீரரே பொறுப்பு

இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள். ஆனால், இந்திய ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும், போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ, வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்னைகளை கவனித்துக் கொள்வார்கள்.

கூடுதல் உதவி தான்

மேலும், ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோதெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்தப் பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும். எனவே, வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்திவாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல, எனக் கூறினார். 13ல் தீர்ப்புதகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் நாளை (ஆக.,13) தீர்ப்பு அளிக்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

lana
ஆக 12, 2024 12:40

தன்னுடைய எடை ஐ கூட இவர்கள் கவனமாக பார்க்க மாட்டார்கள். இதற்கும் அடுத்தவர் தான் பொறுப்பு என்றால் இவர் என்ன தான் செய்கிறார்கள்


அப்புசாமி
ஆக 12, 2024 11:19

நேருதான் பொறுப்புன்னு சொல்லிடுங்க. அடுத்த பதவி உயர்வு நிச்சயம்.


Parthiban vkm
ஆக 12, 2024 10:32

கரெக்ட்டாக சொன்னார்கள்


spr
ஆக 12, 2024 10:29

என்னென்ன குறைகள் இருக்கிறதென்பதனை இவரே பட்டியலிட்டிருக்கிறார். "மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. ஆனால் அதனாலேயே இது விசாரிக்கப்பட வேண்டும் மேலும் ஒலிம்பிக் போல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அக்கறை எடுத்துக் கொள்ளப்படுமென்றால் அது மிக மோசம்


Anbuselvan
ஆக 12, 2024 09:28

இது ஒரு இந்திய வீராங்கனைக்கு ஏற்பட்டதால் நாம் அனைவரும் வருத்தப்பட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி எப்படியாவது மெடல் கிடைக்காதா என ஏங்குகிறோம். விதிகள் என்பது விதிகளாக மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் விதிகளை பின்பற்றி நியாயம் கிடைக்கும். விதிகள் நேர்மாறாக இருப்பின் அதில் ஓட்டைகள் இருக்க வாய்ப்பு இல்லை. பத்து கிராம் எடை கூடுதலாக இருந்தால் கூட விதிகளின் படி அது செல்லாது. வீரர்கள், மருத்துவ குழு, பயிற்சியாளர், உணவு சிறப்பாளர் ஆகிய அனைவருமே இதற்கு பொறுப்புதான். இதுக்கெல்லாமா நாங்க பொறுப்புன்னு உதறி தள்ள முடியாது. வீரர்களும் பயிற்சியாளர்களுக்கு முதலாம் கட்ட பொறுப்பு மற்ற அனைவரும் இரண்டாம் கட்ட பொறுப்பு. CHECKLIST வைத்து கொண்டு IOA அமைப்பு தகுதிகளை சரி பார்க்க வேண்டும். இந்த செயல்முறை நடைமுறையில் இல்லையெனில் அதை கூறி IOA தனக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தட்டி கழித்தல் நாட்டிற்கு நல்லதல்ல. இந்த பாரதத்தை பாருலகில் நல்ல நாடாக பார்க்க வேண்டுமெனில் வெளிப்படை தன்மை மிக முக்கியம்.


Anbuselvan
ஆக 12, 2024 10:21

விதிகள் நேர்மாறாக இருப்பின் அதில் ஓட்டைகள் இருக்க வாய்ப்பு உண்டு என படிக்கவும். nandri


N.Purushothaman
ஆக 12, 2024 08:54

பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. எதிர்மறை சிந்தனை கொண்டவனுங்க இந்தியாவுல அதிகம் ...அதை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் ....


nv
ஆக 12, 2024 07:41

P T உஷா சொல்வது முற்றிலும் சரி.. ஒலிம்பிக் அளவில் அதுவும் தங்கத்திற்கு போட்டி போடும் போது விளையாட்டு வீரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை சொல்வது இப்போது நம் நாட்டில் அதுவும் இளைஞர்கள் மத்தியில் கூடி வருவது வருத்தத்தை அளிக்கிறது..


Sundar R
ஆக 12, 2024 07:38

ஒரு ஒலிம்பிக் போட்டியாளர் போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய சரீர பாரம் கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களைக் குறை கூற இதில் அவசியம் என்ன இருக்கிறது?


அரசு
ஆக 12, 2024 07:34

அப்ப எதுக்கு உங்களுக்கு தலைவர் பொறுப்பு? தலைவர் தான் வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும் பொறுப்பு. சும்மா பாரிஸ் சுற்றி பார்க்கவா உங்களை அனுப்பினார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 09:12

போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.


Murugesan
ஆக 12, 2024 12:41

...எப்படிங்க புரியும்,திருட்டு திராவிட மாடல்


rama adhavan
ஆக 12, 2024 07:28

சரியான வாதம். முற்றிலும் உடன்படலாம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ