உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணுடன் பேசியவரை தாக்கிய நால்வருக்கு ஜாமின்

பெண்ணுடன் பேசியவரை தாக்கிய நால்வருக்கு ஜாமின்

பெங்களூரு : சித்ரதுர்காவை சேர்ந்த உமேஷ் என்பவரும், பர்வீனா என்ற முஸ்லிம் பெண்ணும், ஏப்., 18ம் தேதி ஹாலல்கெரே சாலையில் உள்ள ஜெய் கன்னட நிவாஸ் சன்ஸ்தா வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வளாகத்துக்குள் நுழைந்த நான்கு பேர், உமேசை சரமாரியாக தாக்கி உதைத்தனர். அவர் அணிந்திருந்த தங்க செயின், பணத்தை கொள்ளையடித்தனர். அவரது காரையும் சேதப்படுத்தினர்.படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சித்ரதுர்கா டவுன் போலீசார் விசாரித்து, 20 முதல் 25 வயது வரையிலான யுனிஸ் அகமது, நவீத், சையது சதட், ஜாபர் சித்திக்கி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இதற்கிடையில், உமேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சித்ரதுர்கா மகளிர் போலீஸ் நிலையத்தில் மறுநாள் 19ம் தேதி, பர்வீனா புகார் செய்தார். இதையடுத்து உமேஷ் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர். உமேசை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், ஜாமின் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நேற்று நீதிபதி ஸ்ரீசசானந்தா முன் விசாரணைக்கு வந்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனு தாக்கல் செய்த நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கப்படுகிறது. தலா 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உத்தரவாதம் பத்திரம் வழங்க வேண்டும். சித்ரதுர்கா ரூரல் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரி முன், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுகிழமை காலை 10:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளியூர் செல்லக்கூடாது. சாட்சிகளை மிரட்டவோ அல்லது கலைக்கவோ முயற்சிக்க கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ