உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிங்கப்பூர் செல்லும் பெங்., துப்புரவு தொழிலாளர்கள்

சிங்கப்பூர் செல்லும் பெங்., துப்புரவு தொழிலாளர்கள்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆய்வுக்காக அக்டோபரில் சிங்கப்பூர் செல்ல தயாராகின்றனர்.பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சமூக நலத்துறை, மாநில துப்புரவுத் தொழிலாளர்கள் நல ஆணையம், பெங்களூரு மாநகராட்சி ஒருங்கிணைப்பில், துப்புரவுத் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்வர்.பெங்களூரு மாநகராட்சியின், வார்டுக்கு ஒரு துப்புரவுத் தொழிலாளியை தேர்வு செய்து, சிங்கப்பூருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.

அக்டோபர் மாதம்

அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா உட்பட, தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் 225 முதல் 243 துப்புரவுத் தொழிலாளர்கள், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு புறப்படுவர்.ஏற்கனவே தாவணகெரே மாநகராட்சி, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியின், 70 துப்புரவுத் தொழிலாளர்கள், சிங்கப்பூரில் ஆய்வு சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பினர். இப்போது பெங்களூரு மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆய்வு சுற்றுப்பயணம் அனுப்பப்படுகின்றனர்.

எம்.ஐ.எஸ்.எல்.,

சுற்றுப்பயணம் செல்லும் துப்புரவுத் தொழிலாளர்களை, தேர்வு செய்யும் பொறுப்பு, மண்டல கமிஷனரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தொழிலாளர்கள், ஐந்து குழுக்களாக பிரிந்து, சிங்கப்பூர் செல்வர்.ஒரு குழுவில் 40 முதல் 50 பேர் இருப்பர். இவர்களுடன் சமூக நலத்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் நல ஆணையத்தின் தலா ஒரு அதிகாரிகள் செல்வர். துப்புரவுத் தொழிலாளர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்து வரும் பொறுப்பை எம்.ஐ.எஸ்.எல்., எனும் 'மைசூரு சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்' நிறுவனம் ஏற்றுள்ளது.ஒரு தொழிலாளர்களுக்கு, தலா 1.5 லட்சம் ரூபாய் செலவிடப்படும். இதில் சமூக நலத்துறை 50 சதவீதம்; பெங்களூரு மாநகராட்சி 50 சதவீதம் செலவை ஏற்கும். துப்புரவுத் தொழிலாளர்கள், சிங்கப்பூரில் மூன்று நாட்கள் தங்குவர். தினமும் ஐந்தாறு மணி நேரம், துாய்மை குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சிங்கப்பூரின் பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்வர்.சாக்கடைகளை சுத்தம் செய்ய, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அறிவியல் ரீதியில் குப்பை அழிப்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, பாதுகாப்பு என, அனைத்து விஷயங்கள் குறித்து, ஆய்வு செய்யப்படும். இந்த நடைமுறைகளை பெங்களூரில் செயல்படுத்துவதே, சுற்றுப்பயணத்தின் நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி