உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீகார்: சி.பி.ஐ.,க்கு நவாடா கிராம மக்கள் "செமகவனிப்பு": அதிகாரிகள் திக்கு முக்கு

பீகார்: சி.பி.ஐ.,க்கு நவாடா கிராம மக்கள் "செமகவனிப்பு": அதிகாரிகள் திக்கு முக்கு

பாட்னா: யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரிக்க சென்ற சிபிஐக்கு நவாடா கிராம மக்கள் சிறப்பாக செய்த செம கவனிப்பில் திககுமுக்காடினர். நாடு முழுவதிலும் யுஜிசி நெட் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் உருவாக்கியது. தொடர்ந்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. வினாத்தாள் கசிவு சம்பவத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிபிஐ., அதிகாரிகள் நவாடா கிராமத்திற்கு சென்றனர். ஆனால் சிபிஐ குழுவினர் போலியானவர்கள் என நினைத்த கிராமத்தினர் தங்களது பாணியில் சிறப்பாக 'செம கவனிப்பு' நடத்தி உள்ளனர். இதனை ஒரு சிலர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.கிராமத்தினரின் கவனிப்பை சமாளிக்க முடியாத அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். சமபவம் குறித்து காவல் துறை அதிகாரி அம்ப்ரிஷ் ராகுல் கூறுகையில் உள்ளூர் போலீசாரின் வருகைக்கு பின்னர் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோ அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

வாய்மையே வெல்லும்
ஜூன் 30, 2024 14:19

தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி சிபிஐ அதிகாரிகளை அடித்தார்கள். பிறகு செந்தில்பாலாஜி இன்னிக்கும் கம்பி எண்ணுவது எல்லோருக்கும் தெரியும். அதேபோல பீஹாரிலும் எவனாவது மாட்டப்போகிறார் வெயிட் ண்ட் சி


GMM
ஜூன் 24, 2024 07:43

மத்திய விசாரணை அமைப்புகள் உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாக அலுவலர் உடன் அழைத்து செல்ல வேண்டும். எந்த விவரமும் / காரணமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. உள்ளூர் நிலை அறிந்த நேரடியாக தொடர்பு கொள்ள விசாரணை அமைப்பு கீழ் நிலை அதிகாரியும் உடன் இருக்க வேண்டும்.


ப்ரியாபாரதி
ஜூன் 24, 2024 07:32

தொப்பை இல்லாமல் போனாங்களோ?


Kasimani Baskaran
ஜூன் 24, 2024 05:28

தீம்க்காவினரை பார்த்து காப்பி அடித்து இருக்கிறார்கள். அதிகாரிகளை மிரட்டுவது, தாக்குவது போன்ற வேலை செய்தால் என்ன ஆகும் என்பதை வசூல் மெசினிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


ganapathy
ஜூன் 24, 2024 01:40

சிபிஐ நமது சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு விசாரணை அமைப்பாகும் அந்த அமைப்பினர் கொலைவெறித்தாக்குதலுக்குள்ளானதை கிண்டலாக தினமலர் எழுவது அதன் ஈனபுத்தியை காட்டுகிறது.


S. Gopalakrishnan
ஜூன் 24, 2024 01:28

நவாடா ஜில்லா தலைநகரம். கிராமமல்ல.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ