| ADDED : ஏப் 05, 2024 11:18 PM
ஹாவேரி: ''பா.ஜ.,வின் 10 ஆண்டு டிரெய்லர் மோசமாக உள்ளது. படம் கண்டிப்பாக நன்றாக இருக்காது,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் மானே கிண்டல் அடித்து உள்ளார்.ஹாவேரி, ஹனகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் மானே அளித்த பேட்டி:அவருக்கு 120 மாதங்கள் மக்கள் அவகாசம் அளித்து உள்ளனர். ஆனால் சொன்னது எதையும் செய்யவில்லை. இப்போது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரெய்லர் தான். வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, படத்தை வெளியிடுவோம் என்று கூறுகின்றனர்.பா.ஜ., தலைவர்கள் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. பா.ஜ.,வின் 10 ஆண்டு கால டிரெய்லர் மோசமாக உள்ளது. படம் கண்டிப்பாக நன்றாக இருக்காது. வரி பங்கீட்டில் நமது மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. வறட்சி நிலவுகிறது.ஆனால் நிதியை விடுவிக்காமல், விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. மக்கள் அதிருப்தியால் சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. லோக்சபா தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.