உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை ஒருபோதும் பா.ஜ., மாற்றாது: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

அரசியலமைப்பை ஒருபோதும் பா.ஜ., மாற்றாது: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: ராணுவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ராகுலை பாகிஸ்தான் தலைவர் புகழ்ந்து பேசியது கவலை அளிக்கிறது. நாங்கள் எங்களின் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுகிறோம். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 370 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்.

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை. மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் சேர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது. தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது. பா.ஜ., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ES
மே 05, 2024 22:35

Why should we believe you? Ten years of lie is enough sir


தத்வமசி
மே 05, 2024 16:21

ஏன் மாற்றக் கூடாது ? முந்தைய பிரதமர்கள் எத்தனை முறை மாற்றியுள்ளனர் என்று பாருங்கள் இதெல்லாம் ஏமாற்று வேலை


venugopal s
மே 05, 2024 12:00

பாஜகவில் இப்படிப் பேசினால் கடைசியில் இவரையும் மாற்றி விடுவார்கள்!


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை